ஏக இறைவனின் திருப்பெயரால்...
எமது கிளையின் தற்காலிக காரியாலயம் மற்றும் மஸ்ஜிதாக செயற்பட்டுவந்த இடம் 2012.02.09 ஆம் திகதி தப்லீக் ஜமாஅத் அக்கிரமக்காரர்களின் அக்கிரமத்தால் தொழுகை தடுத்து நிறுத்தப்பட்டதை தொடர்ந்து அங்கு தொழுகை நடாத்துவது தடைபட்டது. இருப்பினும் அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தற்போது வேறு ஓர் இடத்தில் எமது கிளையின் பள்ளிவாசல் மற்றும் காரியாலயம் இயங்கிவருகிறது.
சகோதரர் அஸ்லம் என்பவரின் வீட்டின் ஒருபகுதியை ஐவேளை தொழுகைக்காகவும் ஜும்மா தொழுகைக்காகவும் நிரந்தரமாக இடம் கிடைக்கும் வரை அல்லாஹ்வின் பாதையில் அர்ப்பணித்துள்ளார். இப்பள்ளிவாசல் மஸ்ஜிதுத் தவ்ஹீத் எனும் பெயரில் இயங்கி வருகிறது. அவரின் மறுமை ஈடேற்றத்துக்காக துஆ செய்வோம்.
No comments:
Post a Comment