அகுரனையில் தப்லீக் அரக்கர்கள் அராஜகம் தவ்ஹீத் ஜமாஅத் பிரச்சாகர் தாக்கப்பட்டார்
ஹெம்மதகமை
 விவாதத்தில் தோல்வியுற்ற தப்லீக் ஜமாஅத் பேச்சை பேச்சால் வெல்ல 
திறாணியற்றுப் போய் தமது கரங்களால் வெல்ல எத்தனித்து இலங்கையின் பல 
பகுதிகளிலும் தவ்ஹீத் சகோதரர்களை தாக்கி வருகின்றனர். இது இவர்களின் 
தோல்வியை இன்னும் வலுப்படுத்துகிறது.
 
 ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் 
அகுரனை கிளையினர் பல எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் வீரியமாக செயல்பட்டு 
வருகின்றமை அனைவரும் அறிந்ததே. கடந்த சில நாட்களாக நபிவழியில் நடைபெற்று 
வரும் அவர்களின் ஜும்ஆவை தடுத்து நிறுத்த பல வழிகளிலும் அகுரனை ஜம்இய்யதுல்
 உலமாவும் தப்லீக் பள்ளி நிர்வாகமும் முயற்சியெடுத்து வருகின்றன. பல 
தடவைகள் தவ்ஹீத்வாதிகளை தாக்கியும் உள்ளனர்.
 கடந்த வெள்ளிக்கிழமை 
01.06.2012 அன்று ஜும்ஆத் தொழுகை முடித்து எமது பிரச்சாரகர் சகோதரர் முஆத் 
எம்.ஐ.எஸ்.ஸி அவர்களை வழியனுப்புவதற்காக பைக்கில் ஏற்றிச் 
சென்றுள்ளனர்.இடையில் வழியை மறைத்த அகுரனை ஜம்இய்யதுல் உலமா மற்றும் 
தப்லீக் பள்ளி நிர்வாகத்தின் கீழால் இயங்கும் ரௌடிகள் எமது பிரச்சாரகரை 
கடுமையாகத் தாக்கியுள்ளனர். தாக்கப்பட்ட எமது பிரச்சாரகர் அகுரனை 
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதன் பிறகு ஜும்ஆ நடைபெற்ற 
இடத்திற்கு சென்று கற்களால் எறிந்து சகோதரர் ரிழ்வான் அவர்களின் வீட்டு 
கண்ணாடிகளை சேதப்படுத்தியுள்ளனர். இது தொடர்பாக அகுரனை ஜம்இய்யதுல் உலமா 
மற்றும் தப்லீக் பள்ளி நிர்வாகத்திற்கும் பக்க சார்பாக நடந்து கொள்ளும் 
போலீசுக்கும் எதிராக ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் சட்டரீதியான தகுந்த 
நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
 
 தப்லீக் வாதிகளே!
 உங்கள் 
அராஜக செயல்களுக்கு தவ்ஹீத் ஜமாஅத் ஒரு போதும் அஞ்சாது. எமது பிரச்சாரங்களை
 இலங்கை பூராகவும் மிகவும் வீரியமாக மேற்கொள்வோம். நாளுக்கு நாள் 
நிகழ்ச்சிகளை அதிகரிப்போம். அல்லாஹ்வின் உதவியால் அசத்தியத்தை அழிக்க 
முடிந்தவரை பாடுபடுவோம். குப்பார்களின் வழியிலிருந்து மீண்டு தூய இஸ்லாத்தை
 விளங்க முயற்சி செய்யுங்கள்
 
 
 
 
          
      
 
  
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment