பகிரங்க இஸ்லாமிய மார்க்கச் சொற்பொழிவு (11.05.2012)

ஏக இறைவனின் மாபெரும் கிருபையால் ஆரம்பிக்கப்பட்ட இம்மார்க்கச் சொற்பொழிவு மாலை 05.00 மணிக்குத்தான் ஆரம்பம் என்று அறிவிக்கப்பட்டது, ஆனால் மாலை 04.00 மணிக்கே மக்கள் அரங்கத்தை  சுற்றி குழுமிவிட்டார்கள்.


சத்தியத்தை எந்த விதமான ஒழிவு மறைவுமின்றி எடுத்துரைப்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட எமது ஜமாஅத்தின் முதலாவது பிரச்சார மேடை சாய்ந்தமருது கடற்கரைத்திடலில் நாட்டப்பட்டது.

ஆரம்ப உரையாகவே சகோதரர் அல்தாபி நிகழ்த்திய  இஸ்லாம் கூறும் மனோதத்துவம் எனும் தலைப்பிலான உரை ஒலி பெருக்கியின் ஊடாக அங்கு கூடியிருந்த அனைவரின் உள்ளத்தையும் வெகுவாக கவர்ந்தது.


மாலை 05.30 மணிக்கு சகோதரர் நிக்றாஸ் தலைமை உரையாக கல்விக் காவலர்களின் கவனத்திற்கு! எனும் தலைப்பில் நிகழ்ச்சியை ஆரம்பித்தார். எமது நாட்டிலுள்ள முஸ்லிம் பாடசாலைகளில் நடைபெறும் மார்க்க விரோதச் செயல்களை  தனது வாழ்வில் இருந்தே சுட்டிக் காட்டினார்.


அடுத்த அமர்வு, மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து துவங்கியது......

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் பிரச்சாரகர் அஜ்மீர் அமீனி தியாகத்தில் வளர்ந்த இஸ்லாம் எனும் தலைப்பில் உரையாற்றினார். தியாகம் என்றால் என்ன? அது எவ்வாறு முஸ்லிம்களின் தனி உடமையாக மாரியது? இந்த இஸ்லாமிய மார்க்கம் எப்படிப்பட்ட இரத்தக் கரைகளைத்தாண்டி எமது கைகளுக்குக் கிடைத்தது போன்ற அனைத்து விடயங்களையும் உள்ளடக்கிய ஓர் உறுக்கமான உரையை நிகழ்த்தினார்.



இறுதி அமர்வாக, நிகழ்ச்சியின் கருப்பொருள் உரை நாங்கள் ஏன் தனித்து செயற்படுகின்றோம் எனும் தலைப்பில் சகோதரர் றியாஸ் MISC அவர்கள் உரை நிகழ்த்தினார்.

இந்நிகழ்ச்சி எதற்காக கூட்டப்பட்டதோ அதற்கான முழு வடிவமே இவ்வுரையில் அடங்கியிருந்தது. நமது ஜமாஅத்தின் செயற்பாடுகள், மற்ற ஜமாஅத்தில் இருந்து ஏன் தனித்து நிற்கின்றோம், தனித்து நின்றதால் எதனை சாதித்தோம் போன்ற அனைத்து விடயங்களையும் பிரித்து அழகாக விளக்கிச் சென்றார்.
நிகழ்ச்சி சரியாக மாலை 09.00 மணிக்கு நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment