தம்புள்ள
ஜும்ஆ பள்ளிவாயல் பேரினவாத சக்திகளால் தற்பொழுது முற்றுகை
இடப்பட்டுள்ளதாகா உறுதிப்படுத்தப் பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜும்ஆவிற்கு
சென்ற முஸ்லிம் சகோதரர்கள் பள்ளியினுள் இருந்து வெளிவர முடியாதவாறு
பேரினவாத சக்திகளால் பள்ளிவாயல் முற்றுகை இடப்பட்டுள்ளதாகவும் பள்ளியை
நோக்கி கட்கள் வீசப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும்,
தகட்டினால்லான பள்ளியின் சிறுபகுதி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய
வருகின்றது.
இராணுவத்தினறும் பொலிசாரும் கடமையில் உள்ளபோதும் நிலைமை மிகவும் அச்சமாகவே உள்ளதாக அங்கே உள்ள சகோதரர்கள் தெரிவிக்கின்றனர்.
இறைவனின் இல்லமான இப்பள்ளிவாயலைப்
பாதுகாப்பதற்கான பிரார்த்தனைகளில் தங்களுடன் இணைந்து கொள்ளுமாறு
தம்புள்ளையில் தொழில்நிமித்தம் வசித்துவரும் எமது சகோதரர்கள் கண்ணீருடன்
எமது சமூகத்துக்கு கோரிக்கை விடுக்கின்றனர்.
தற்போது கிடைக்கபெற்ற தகவல்களின்படி, தம்புள்ள ஜும்ஆ பள்ளிவாயல் பேரினவாத சக்திகளால் உடைக்கப்பட்டுள்ளது.
முதலில் பள்ளிவாயலில் உள்ளே இருந்த
முஸ்லிம் சகோதரர்கள் பொலிசாரின் வற்புறுத்தலின் காரணமாக
வெளியேற்றப்பட்டனர். அங்கே ஜும்ஆ நடைபெறவில்லை.
பின்னர் பொலிசார் மற்றும் இராணுவத்தினர்
முன்னிலையில் காவி உடை அணிந்தவர்கள் பள்ளியின் உள்ளே சென்று அங்கே இருந்த
சகல பொருட்களையும் உடைத்து அளித்தனர்.
அத்தோடு பள்ளியையும் உடைத்து அளித்துள்ளதாக அங்கே இருந்து எமது சகோதரர் காத்தான்குடி இன்போவிற்கு கண்ணீருடன் தெரிவித்தார்.
அரசில் ஒட்டியுள்ள முஸ்லிம்
அமைச்சர்களுக்கு பல்வேறு தகவல்கள் இது தொடர்பாக தெரிவிக்கப் பட்டபோதும்,
அவர்களால் எந்த விதமான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.
மேலதிக தகவல்கள் கிடைக்குமிடத்து வாசகர்களுக்காக பதிவேற்றப்படும்
4th Update
பொலிஸார், இராணுவம் வேடிக்கைபார்க்க
அல்லாவின் இல்லம் உடைக்கப்பட்டது. பள்ளிவாயல் உடைப்பு மற்றும் ஆர்ப்பாட்டம்
தொடர்பாக சிங்கள இணையம் பிரசுரித்த படங்களை இங்கே பிரசுரிக்கின்றோம்.
நன்றி - காத்தான் குடி இன்போ இணையதளம்.







No comments:
Post a Comment