ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் கல்முனை-சாய்ந்தமருது கிளை ஆரம்பம்(2012-02-04)


ஏக இறைவனின் திருப்பெயரால்...

ஏகனின் ஏக கொள்கையை எங்கும் நிலைநாட்டவேண்டும் என்பதற்காகவும் சமுதாயப்பணிகளை செய்வதற்காகவும் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத், இலங்கையில் பல பிரதேசங்களில் கிளைகள் அமைத்து வருகின்றன.
அந்த அடிப்படையில் கல்முனை-சாய்ந்தமருது பிரதேசத்திலும் கிளை அமைப்பதற்கான ஒன்று கூடல் 2012-02-04 ஆம் திகதி சனிக்கிழமை அஸர் தொழுகைக்குப்பின் சகோதரர் அஸ்லம் அவர்களின் வீட்டில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இதன்போது,  ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் தேசிய தலைவர், உப தலைவர் மற்றும் உறுப்பினர்கள் மூலமாக ஜமாஅத்தின் நோக்கம், நிலைப்பாடுகள் பற்றி விளக்கமளிக்கப்பட்டு கலந்தாலோசிக்கப்பட்டது.


No comments:

Post a Comment