பறகஹதெனியவில் ஜும்ஆவை நிறுத்த அராஜகம் செய்யும் அசத்தியக் கும்பல்

இலங்கையில் தவ்ஹீத் பிரச்சாரம் ஆரம்பிக்கப்பட்ட இடங்களில் முக்கிய இடமாக பறகஹதெனிய திகழ்கிறது. ஆனால், இன்று இந்த பெருமையை சிதைக்கும் களமாக அது மாறியுள்ளது.

தவ்ஹீத்வாதிகள் என்று தங்களைப் போற்றிக் கொள்ளும் இவர்களில் பலருக்கு தவ்ஹீத் என்றால் என்னவென்றே தெரியாது. அதனால் தான் ஏகத்துவத்தை தடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

அன்று தவ்ஹீத் பிரச்சாரம் எப்படி ரவுடிகளாலும் அரசில்வாதிகளாலும் தடுக்கப்பட்தோ அதேபோல் இன்று போலித் தவ்ஹீத்வாதிகளால் தடுக்கப்டுகிறது.

“இஸ்லாம் அந்நியமான நிலையில் தோன்றியது. அது மீண்டும் அந்நிய நிலைக்குச் செல்லும். அதை சீர் செய்வோர் மீது சுபசோபனம் உண்டு” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். இந்த நபிமொழி இன்றைய நிலையை மிகவும் தெளிவாக படம்பிடித்துக் காட்டுகிறது.

இன்று தவ்ஹீத் என்ற போர்வையில் சில போலி இயக்கங்கள் உள்ளன. இவர்கள் தவ்ஹீதை வளர்ப்பதை விட தவ்ஹீதை சிதைக்கும் பணிகளைச் செய்து வருகின்றனர். தவ்ஹீதுக்கு எதிரான அத்தனை அனாச்சாரமும் நடைபெறும் பள்ளிகளைக் கட்டி அசத்தியவாதிகளிடம் ஒப்படைக்கின்றனர். ஆனால் தூய்மையான முறையில் இஸ்லாத்தை போதனை செய்வோரைத் தடுக்கின்றனர்.

ஜும்ஆ நடக்கும் பள்ளிகளை (இடங்களை) ப் பாழாக்க முனைவோருக்கு அல்லாஹ் விடுக்கும் எச்சரிக்கையை சுட்டிக் காட்டக் கடமைப்பட்டுள்ளோம்.
அல்லாஹ்வின் பள்ளிவாசல்களில் அவனது பெயர் கூறப்படுவதைத் தடுத்து, அவற்றைப் பாழாக்க முயல்பவனை விட பெரும் அநீதி இழைத்தவன் யார்? பயந்து கொண்டே தவிர அவற்றில் நுழையும் உரிமை அவர்களுக்கு இல்லை. அவர்களுக்கு இவ்வுலகில் இழிவும், மறுமையில் கடுமையான வேதனையும்முண்டு. அல்குர்ஆன் 2:114

பறகஹதெனியவில் தவ்ஹீத் சகோதரர்களை தாக்கி ஏகத்துவப் பிரச்சாரத்தைத் தடுக்க பல முயற்சிகளை போலித் தவ்ஹீத்வாதிகள் செய்து பார்த்தனர். அது முடியாமல் போனவுடன் சுன்னத் வல் ஜமாஅத்தினரையும் அரசியல்வாதிகளையும் தூண்டிவிட்டு தடுக்க புதிய முயற்சிகளை மேற்கொள்கின்றனர்.

கடந்த 27.04.2012 அன்று ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் பரகஹதெனிய கிளை சகோதரர்களை சந்திக்க பிரதேச சபை உருப்பினர் ரிபால் என்பவரின் தலைமையில் ஒரு கூட்டம் ஜும்ஆ நேரத்தில் தவ்ஹீத் ஜும்ஆ நடக்கும் இத்ரீஸ் ஆசிரியரின் வீட்டுக்கு சென்றிருந்தது. வந்த விசயத்தை எமது சகோதரர்கள் விசாரித்தனர்.

அங்கே பேசிய அரசியல்வாதியான ரிபால் என்வர் எமது ஊரில் பல வருடங்களாக இரண்டு பிரிவுகளாகப் பிரிந்து இரண்டு ஜும்ஆக்கள் நடைபெறும் வேளையில் நீங்கள் மூன்றாவது ஜும்ஆவை ஏன் நடாத்த வேண்டும். இரு சாராரில் ஒருவருடன் சேர்ந்து தொழ வேண்டியது தானே என்று  தவ்ஹீத் சகோதரர்களிடம் கேட்டுள்ளார். அத்தோடு வீட்டில் தொழ வேண்டாம். பள்ளி கட்டி அதில் தொழுங்கள். இல்லாவிட்டால் உங்கள் ஜமாஅத் உள்ள ஊர்களில் சென்று தொழுங்கள் என்று கூறியுள்ளார்.

அப்போது எமது சகோதரர் ஒருவர் இது பற்றி நாம் மூன்று பிரிவினரும் பேசுவதற்கு  ஒரு ஏற்பாட்டை செய்யுங்கள என்று கூறியுள்ளார்.
அதற்கவர்கள் இல்லை நாங்கள் ஜம்ஆ நடத்துவதா? இல்லையா? என்ற தகவலை எடுக்கத்தான் வந்தோம் என்று கூறினர்.

அத்தோடு இடையில் நடுநிலையான ஒருவர் குறுக்கிட்டு மூன்று சாராரும் பாடசாலை மைதானத்தில் அமர்ந்து விவாதித்து ஒரு முடிவுக்கு வரலாமே என்று தெளிவாகப் பேசினார்.

நாங்கள் அந்த விவாதங்களுக்கு வர மாட்டோம். நீங்கள் ஜும்ஆ செய்யக் கூடாது என்று வந்வர்களில் மற்றுமொருவர் கூறினார்.

விவாதிக்கத் தான் உங்களால் முடியவில்லை என்றால் நாம் கலந்துரையாடி ஒரு முடிவுக்கு வரலாமே என்று எமது சகோதரர் ஒரவர் கூறினார்.

அதெல்லாம் முடியாது. ஏனெனில் நாங்கள் மார்க்கத்தில் ஸீரோ. எங்களுக்கு மார்க்கம் தெரியாது என்று கூறியுள்ளார் அந்த அரசியல்வாதி.

அத்தோடு,  மெல்வத்தையிலுள்ள பள்ளியையும் எமது கட்டுப்பாட்டுக்கு கொண்டுவந்து விட்டோம். (எற்கனவே நாம் ஜும்ஆ செய்த பள்ளி வாசல்) இங்கு ஜும்ஆவை நிறுத்தத்தான் வேண்டும். அதற்காக வந்தோம். இந்த வாரமில்லாவிட்டாலும் அடுத்தவாரம் ஒரு கூட்டம் இங்கு அடிதடிக்கு வரும் என்று மிரட்டியும் எமது சகோதரர்கள் விட்டுக் கொடுக்கவில்லை.

இப்படி கதை பெரிதாக இழுபட்டுச் செல்ல எமது சகோதரர்கள் நீங்கள் என்ன சொன்னாலும் நாங்கள் ஜம்ஆவை நிறுத்த மாட்டோம். அதற்காக எங்கள் உயிர் போனாலும் பரவாயில்லை என்று உறுதியாக கூறினர். அப்போது ஒரு தப்லீக் பள்ளி உறுப்பினர் JASM பள்ளியில் உங்களுக்கு இடமில்லையானால் எங்கள் பள்ளிக்கு வாருங்கள் என்றார். அதையும் இவர்கள் மறுத்துள்ளனர். அத்தோடு அவர்கள் போய்விட்டார்கள்.

ஜும்ஆவை நிறுத்த கையாண்ட காடைத்தனம்
கடந்த 04.05.2012 அன்று இத்ரீஸ் ஆசிரியரின் வீட்டில் வழமை போன்று ஜும்ஆவுக்காக எமது சகோதரர்கள் தயாரானார்கள். ஜும்ஆவை நடாத்துவதற்காக எமது அழைப்பாளர் ரிஸ்கான் ரஷாதி அவர்களும் அங்கு சென்றுவிட்டார்.

அந்த நேரம் பார்த்து  அரசியல் வாதி ரிபாலின் ரவ்டிகள் அங்கே வந்தனர். இருவர் உள்ளே வந்து எமது அழைப்பாளர் ரிஸ்கானிடம் நீங்கள் யார்? எதற்கு இங்கு வந்திருக்கிறீர்? என்று கேட்க அவர்கள் நான் இன்னவர்.இங்கு ஜும்ஆ நடாத்த வந்திருக்கிறேன் என்று கூறினார். உடனே நீங்கள் எங்களுடன் வாருங்கள். உங்கள் ஊருக்கு போய்விடுங்கள். இல்லாவிட்டால் நடப்பது வேறு என்று அவரை மிரட்டினர்.

அப்போது, அவரை நாங்கள் அழைத்துள்ளோம். நாங்கள் பிரகு அவரை அனுப்புவோம் என்று எமது சகோதரர்கள் கூறினர். அப்போது வீட்டிற்கு வெளியே கூட்டம் அதிகரித்தது. நாங்கள் உங்களுக்கு அடிக்க மாட்டோம். எங்களுடன் வாருங்கள் என்று  அவர்கள் எமது அழைப்பாளர் ரிஸ்கானை பலவந்தமாக ஆடோவில் ஏற்றிச் சென்றனர்.

அரசியல்வாதி ரிபாலின் மிரட்டல்
ஆட்டோ இடையில் நிருத்தப்பட்டது. அப்போது எமது அழைப்பாளர் ரிஸ்கான் ஏன் என்னை இங்கே நிருத்துரீங்க? பஸ்ஸில் எற்றிவிடுவதாகத் தான் சொன்னீங்களே! என்று கேட்டார். அப்போது வழியில் காத்திருந்த அரசியல்வாதி ரிபால் குறுக்கிட்டு இனி மேல் இந்த ஊர்ப் பக்கம் தலைவைத்தும் படுக்காதே! என்று எமது அழைப்பாளர் ரிஸ்கானை மிரட்டிவிட்டு பஸ்ஸில் ஏற்றியும் விட்டார்களாம் என்று எமது மவ்லவி கூறினார். இந்த அரசியல்வாதியும் இவரது ஆதரவாளர் சிலரும் அண்மையில் சிரி கொதாவில் ரணிலுக்கு எதிராக ரவுடித்தனம் பண்ணி சிறை சென்று வந்த JASM உறுப்பினர் என்று எமது பறகஹதெனிய சகோதரர்கள் கூறினர். இவர் அங்கு செய்த அராஜகம்  செய்திகளில் காண்பிக்கப்பட்டதாகவும் அவர்கள் கூறினர். அத்தோடு வெளிநாடுகளுக்கு பணிப் பெண்களை (மஹ்ரமில்லாமல் முஸ்லிம் பெண்களை வேளைக்கு அனுப்பவதால் அங்கு என்ன நடக்கின்றது என்பதை உலகமே அறியும்) வீட்டு வேளைக்கு அனுப்பும் ஏஜென்சியும் இவர் வைத்திருக்கிறார். இதுதான் இவர்களின் தவ்ஹீத்!? இது போன்ற காரணங்களால் தான் நாங்கள் தனித்து செயற்படுகின்றோம் என்று அவர்கள் கூறுகின்றனர்.

தொழ வந்தவர்களை தாக்கிய ரவ்டிகள்
இச்சம்பவம் முடிந்து சற்று நேரத்திற்குப் பின்னர் ஜம்ஆத் தொழுகைக்காக வழமைபோன்று இத்ரீஸ் ஆசிரியர் வீட்டுக்கு வந்த எமது சகோதரர் நயீம் மற்றும் அவரின் உறவினர் ஒருவரையும் அந்த ரவ்டிகள்  தலையிலும் முகத்திலும் பலமாக அடித்தனர்.

JASM ல் உள்ள சிலர் பல தடைவ சகோதரர் நயீம் அவர்களை மிரட்டியதாகவும் தான் பொறுமையாக இருப்பதாகவும் அவர் ஜமாஅத்திடம் தெரிவித்திருந்தார்.
குறிப்பு: இப்பிரச்சினைக்கு சம்பந்தப்பட்வர்களில் தவ்ஹீத் ஜமாஅத்துக்கு எதிராக ஜமாஅத் அன்சாரிஸ் சுன்னதில் முஹம்மதிய்யா மற்றும் சுன்னத் ஜமாஅத்தினரைச் சேர்ந்த ரிபாலின் அடியாட்களும் ஒன்றிணைந்து வந்திருந்தனர். இது சித்தீக் மதனியின் தூண்டுதல் தான் என்றும் அவ்வூர் மக்ககளில் உண்மை அறிந்த பலர் அடித்து சொல்கின்றனர். தாக்கியவர்களுக்கு எதிரகாக மாவத்தகமை பொலிஸ் நிலையத்தில் குற்றத் தாக்கல் பதிவு செய்யப்பட்டுள்ளது.

“உங்களை விட்டும்இ அல்லாஹ்வையன்றி எதனை வணங்குகிறீர்களோ அதை விட்டும் நாங்கள் விலகியவர்கள். உங்களை மறுக்கிறோம். அல்லாஹ்வை மட்டும் நீங்கள் நம்பிக்கை கொள்ளும் வரை எங்களுக்கும், உங்களுக்குமிடையே பகைமையும் வெறுப்பும் என்றென்றும் ஏற்பட்டு விட்டது என்று கூறிய விஷயத்தில் இப்ராஹீமிடமும் அவருடன் இருந்தோரிடமும் உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது. “அல்குர்ஆன் 60:4

No comments:

Post a Comment