தம்புள்ள பள்ளிவாசல் இடிப்பை எதிர்த்து SLTJயின் மாபெரும் கண்டன ஆர்ப்பாரட்டம் (27.04.2012)
அல்லாஹ்வின் ஆலயத்தை காப்பதற்கான மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி!
அழைத்தது ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்
கடந்த 20.04.2012 ஆம் திகதி இலங்கை முஸ்லிம்களின் உணர்வுகள் மொத்தமாய்
எரிமலையாக்கப்பட்ட தினம்! இலங்கை தேசத்தின் இறைமையை காக்கும் இமைகளாய்
வாழ்ந்த முஸ்லிம்களின் இறையில்லம், இனவாதிகளின் ஆக்ரமிப்புக்கும்,
அடாவடித்தனத்துக்கும் உள்ளாகியது, எமது வழிபாட்டு உரிமை தட்டிப்பறிக்கப்பட்ட
கரு தினம்! 60 ஆண்டுகளாய் அல்லாஹ்வை வழிபட்டு வந்த, அரச பதிவுகளுடன் கூடிய
ஆவணங்களை அத்தாட்சியாய் வைத்துள்ள, ஓர் இறையில்லத்தை திட்டமிட்ட சதிவலைகள்
மூலம் சில இனவாத சக்திகள் கபளீகரம் செய்ய எத்தனித்த தினம்!
‘பௌத்தர்களுக்குரிய புனித பூமிக்குள் முஸ்லிம்களின் வழிபாட்டுத்தளம் அமைய
இடமளியோம்! என்ற இனவாத கோஷத்துடன் ஓர் இறையில்லம் தாக்குதலுக்கு
உள்ளாகியுள்ளமை இந்நாட்டின் பூர்வீகக் குடிகளான முஸ்லிம்களின் மத உரிமையை
தட்டிப்பறிக்கும் செயலாகவே கருத வேண்டியுள்ளது.
இலங்கை ஜனநாயக சோசலிஸக் குடியரசின் சட்ட யாப்பின் மத சுதந்திரத்தை
வழியுறுத்தும் 10ம் ஷர்த்து மற்றும் நிந்தனைகளிலிருந்து பாதுகாக்கும் 11ம்
ஷர்த்து, அடிப்படை மனித உரிமைகளைப் பாதுகாக்கும் 15ம் ஷர்த்து போன்றவை
இவ்வினவாதிகளினால் இங்கு அப்பட்டமாய் மீறப்பட்டுள்ளன.
எனவே, அல்லாஹ்வின் ஆலயத்துக்குள் அத்துமீறி நுழைந்த காடையர்களை கைது செய்து
சட்டத்தின் முன் நிறுத்தக் கோரியும், இடிக்கப்பட்ட பள்ளிவாயல் அதே
இடத்தில் தொடர்ந்தும் அமைக்கப்பட வேண்டும் என்ற இரு கோரிக்கைகளையும்
அடிப்படையாக வைத்து மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணியொன்றினை கொழும்பு
மாநகரில் செய்வதற்காய் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் இலங்கை வாழ் முஸ்லிம்களை
வாஞ்சையுடன்அழைத்தது.
இப் பேரணியில் எமது அழைப்பை ஏற்று சுமார் 500ற்கும் மேற்பட்ட சகோதர சகோதரிகள் கலந்து கொண்டனர்.
ஜூம்ஆ தொழுகை முதல் ஆரம்பமான இப்பேரணி எமது தலைமையகத்தில் இருந்து கொழும்பு புரக்கோட்டை புஹையிரத நிலையம் வரை சென்றது. கொட்டும் மழையையும் பொருப்பெடுத்தாமல் இறையில்லத்தை மீட்போம் எனும் ஒரே ஒரு குறிக்கோலுடன் தலும்பாமல் நின்றதைக் கண்டு மாற்று மத அன்பர்களும் அதிர்ந்து போனர்.
அல்லாஹ்வின் பேரருளால் எவ்வித தடங்களும்மின்றி எமது பேரணி நிறைவுற்றது. அல்லாஹ் ஒருவனுக்கே எமது நன்றிகள்.
No comments:
Post a Comment