தம்புள்ளை பள்ளிவாசலை அகற்ற பிரதமர் உத்தரவு; ‘வேறு இடத்தில் காணி வழங்கப்படும்’ (22.04.2012)

தம்புள்ளையிலுள்ள சர்ச்சைக்குரிய பள்ளிவாசலை அகற்றுமாறு புத்தசாசன மற்றும் சமய விவகார அமைச்சரும் பிரதமருமான டி.எம்.ஜயரட்ன இன்று ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ரங்கிரி தம்புள்ள விகாரை புனித பிரதேசத்தில் இப்பள்ளிவாசல் அமைந்துள்ளமையினால் இப்பள்ளிவாசலை உடனடியாக அகற்றுமாறும் பிரதமர் உத்திரவிட்டுள்ளார்.

இதற்கு பதிலாக வேறு இடத்தில் இப்பள்ளிவாசலை நிர்மாணிக்க காணி வழங்கப்படும் எனவும் பிரதமர் தெரிவித்தார்.

(Courtesy: Tamil Mirror)

No comments:

Post a Comment