மாற்றுக் கொள்கைச் சகோதரர்களுடன் கலந்துரையாடல் (06.04.2012)

ஏக இறைவனின் திருப்பெயரால்...

அல்லாஹ்வின் பேரருளால் கடந்த வெள்ளிக்கிழமை அஸர் அதாழுகையின் பின் சாய்ந்தமருது கடற்கரைப்பகுதியில் மாற்றுக் கொள்கையில் உள்ள சகோதரர்களுடன் ஒரு ஆரோக்கியமான கலந்துரையாடலை எமது கிளை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டது.


இந்நிகழ்வு ஏன் நீங்கள் சிறீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்துடன் இணைந்து செயற்பட தயங்குகிறீர்கள் ? எனும் கருப்பொருளில் ஆரம்பிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்காக மாற்றுக் கொள்கையில் உள்ள சகோதரர்களை தேர்வு செய்து அவர்களுக்கு துண்டுப்பிரசுரம் வழங்கப்பட்டு அழைக்கப்பட்டனர், அல்ஹம்துலில்லாஹ் அழைக்கப்பட்ட பெரும் பான்மையான சகோதரர்கள் கலந்து தம்முடைய ஐயங்களை எமது அழைப்பாரிடமிருந்து தெரிந்து கொண்டார்கள்.

இந்நிகழ்ச்சிக்காக தலைமையகத்தில் இருந்து வருகை தந்த சகோதரர் ரியாஸ் MISC அவர்கள் பதில் வழங்கினார்கள்.


No comments:

Post a Comment