விமர்சனத்திற்கு பதில்!
விமர்சனத்திற்கு பதில்!
பணத்திற்காக இறைவனை மறந்த நாகூர் ஹனீபா.
நாகூர்
ஹனீபா பற்றி நமது தளத்தில் வெளியிடப்பட்ட ஆக்கம் தொடர்பில் பல சகோதரர்கள்
மின்னஞ்சல் மூலமும், சமூக வலை தளங்கள் மூலமாகவும், நாம் நாகூர் ஹனீபாவை வசை
பாடுவதாகவும், அவரின் கவுரவத்தை கெடுப்பதற்கு எத்தனிப்பதாகவும் சில
கருத்தூட்டங்களை வெளியிட்டிருந்தார்கள்.
குறிப்பிட்ட சகோதரர்களுக்கு
நாகூர் ஹனீபா என்பவர் இஸ்லாத்தை எப்படியெல்லாம் குழி தோண்டிப் புதைத்தார்
என்பதை தெளிவு படுத்துவதற்காக சில உதாரணங்களை இங்கே நாம் வெளியிடுகின்றோம்.
ஆம் அல்லாஹ்வை மாத்திரமே வணங்க
வேண்டும், அவனுக்கு இணையாக யாரும் இல்லை, அவன் தனித்தவன், இணை,
துணையற்றவன். என்ற ஏகத்துவக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு
கட்டமைக்கப்பட்டதுதான் இஸ்லாம்.
ஆனால் நாகூர் ஹனீபாவின் இஸ்லாமிய பின்பற்றுதல் எப்படியிருந்தது என்பதை அவருடைய பாடலே தெளிவாக உணர்த்தி விடுகின்றது.
நல்லவர்கள் எந்த மதத்தில்
இருக்கிறார்களோ இறைவனும் அந்த மதத்தைச் சேர்ந்தவன் தான் என்று இறைவனின்
மார்க்கத்தைப் பின்பற்ற வேண்டிய ஹனீபா இறைவனுக்கு மார்க்கம் சொல்லிக்
கொடுக்க முற்பட்டார்.
இதற்கு அவர் சூட்டிக் கொண்ட பெயர்
சமூக நல்லிணக்கம்.(?) சமூக நல்லிணக்கத்திற்காக பாடுகின்றேன் என்று கூறி
இறைவன் கிருத்தவனா? முஸ்லீமா? இல்லை ஹிந்துவா? என்று கேள்வி கேட்கும்
அளவுக்குத்தான் அவருடைய மார்க்கத் தெளிவு இருந்தது என்றால் பார்த்துக்
கொள்ளுங்கள்.
சினிமாப் படத்துக்காக சீரான மார்க்கத்தின் கொள்கையையே கொச்சைப் படுத்த முனைந்தவர் தான் இவர் என்பதற்கு இதை விட என்ன ஆதாரம் வேண்டும்?
சினிமாவுக்காக இறைவனை கொச்சைப்படுத்தி நாகூர் ஹனீபா பாடிய பாடலை பாருங்கள்.
அல்லாஹ்வை வணங்க வேண்டும் என்றும், அவன்
தான் அனைவரையும் காப்பவன், உணவளிப்பவன், பாவங்களை நீக்குபவன், நோய்களை
நீக்குபவன் என்றும் இவற்றை ஒத்துக் கொண்டு அதன் படி வாழ்பவன் தான் உண்மை
முஸ்லீம் என்றும் இஸ்லாம் நமக்குக் கற்றுத் தருகின்றது.
ஆனால் நாகூர் ஹனீபாவோ ஏர்வாடி
அவ்லியாவை கடவுளாக்குகிறார். இறைவனின் சக்திகள் ஏர்வாடியில் இருக்கும்
அவ்லியா(?) வுக்கு இருப்பதாக ஹனீபா பாடும் பாடல் காட்சியைப் பாருங்கள்.
இது போன்ற எண்ணற்ற பாடல்கள் மூலமாக இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையையே மறந்து பணத்திற்காக ஜால்ரா போட்டவர் தாம் இந்த நாகூர் ஹனீபா.
அன்பின் சகோதரர்களே! ஒருவர் மேல்
கொண்ட அபிமானத்தினால் அவருடைய தவறுகளைக் கூட சரியாக்கிவிட வேண்டும் என்று
நினைப்பது இஸ்லாமியனின் பண்பல்ல. யார் தவறு செய்தாலும் அதைத் தட்டிக்
கேட்டு தூக்கி எறிவோம் என்று முடிவெடுப்பதுதான் உண்மை முஸ்லிமின் பண்பாக
இருக்க வேண்டும் என்பதை நினைவுபடுத்துகின்றோம்.
நியாயமாக சிந்தித்துப் பாருங்கள். உண்மையை உணர்வீர்கள்.
நன்றி www.rasminmisc.tk
No comments:
Post a Comment