பீஜேயை தக்லீத் செய்கிறார்களா?


ஏக இறைவனின் திருப்பெயரால்.....
 
உங்கள் உலமாக்கள் அனைவரும் பீஜேயை தக்லீத் பண்ணுகிறார்கள் .எதைச் சொன்னாலும் தலை ஆட்டுகிறார்கள் இது வழிகேடு இல்லையா ?என்று வினா தொடுக்கிறார்கள் பதில் தரவும்
ரிசாஃப், இலங்கை

பதில்
தக்லீத் என்ற அரபுச் சொல்லுக்கு ஒருவரைக் கண்மூடிக் கொண்டு பின்பற்றுதல் என்று பொருள். இவ்வாறு பின்பற்றுபவர்கள் அந்த நபர் சொல்வது சரியானதா? அறிவுக்குப் பொருத்தமானதா? அதற்கு ஆதாரம் இருக்கின்றதா? என்றெல்லாம் சிந்திக்க மாட்டார்கள். எனவே இவர்களிடம் ஆலோசனை செய்வதையும் ஆராய்வதையும் வாதப் பிரதிவாதங்கள் நடத்துவதையும் பார்க்க முடியாது
 
ஆனால் நம்முடைய ஜமாஅத்தில் நிர்வாக விஷயங்களிலும் மார்க்க விஷயங்களிலும் ஒருவரைக் கண்மூடி பின்பற்றும் நிலை இல்லை. நிர்வாகம் சம்பந்தமாக ஒரு முடிவை எடுப்பதாக இருந்தால் சக நிர்வாகிகளிடம் கலந்தாலோசித்து அனைவரின் ஒப்புதலுடனே முடிவெடுக்கப்படுகின்றது

தலைமை நிர்வாகத்தில் மட்டுமின்றி செயற்குழு பொதுக்குழு ஆகியவற்றிலும் ஜமாஅத் உறுப்பினர்களின் கருத்தைப் பிரதிபலிக்கக்கூடிய ஜமாஅத்தாகவே தவ்ஹீத் ஜமாஅத் உள்ளது. இந்த ஜமாஅத்தில் தனிமனித வழிபாடு இருந்தால் இது போன்று கூட்டங்களை நடத்த வேண்டிய அவசியமில்லை

தனிமனிதனை வழிபடக்கூடியவர்களிடம் கருத்து வேறுபாடே வராது. ஏனென்றால் அவர்கள் ஒரு மனிதனுக்குக் கட்டுப்பட்டு இருப்பார்கள். அவன் சொல்வதற்கு மாற்றமாகப் பேசமாட்டார்கள்.

 ஆனால் நம்முடைய ஜமாஅத்தில் சில மார்க்க விஷயங்களில் நமது அறிஞர்களுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்படுகின்றது. அனைவரும் கூடி ஆராயந்த பிறகு ஒரு சுமூகமான முடிவு எடுக்கப்படுகின்றது

ஒருவர் கூறும் கருத்து தவறாக இருந்தால் அதை மற்றவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். தவறான கருத்தைக் கூறியவர் அதைத் திருத்திக் கொள்கிறார். தக்லீத் செய்யக் கூடியவர்களிடம் இது போன்ற பண்புகளைப் பார்க்க முடியாது

நிர்வாக விஷயத்திலும், மார்க்க விஷயத்திலும் யாரையும் தக்லீத் செய்யாத ஜமாஅத் தமிழ்நாட்டில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தைத் தவிர்த்து வேறில்லை என்று கூறலாம்

இப்படிப்பட்ட ஜமாஅத்தைப் பார்த்து தக்லீத் செய்யக் கூடியவர்கள் என்று சிலர் கூறுகிறார்கள் என்றால் அதற்கு ஒரு காரணம் இருக்கின்றது

நமது நிலைபாடுகளை அறிவுப்பூர்வமாகவும், ஆதாரப்பூர்வமாகவும் முறியடிக்க திராணி அற்றவர்களே இந்த விமர்சனத்தைக் கையில் எடுக்கின்றனர். இவ்வாறு கூறினால் மக்கள் இந்த ஜமாஅத்தைப் புறக்கணிப்பார்கள் என்பதற்காக நம்மிடம் இல்லாத இந்தக் குற்றத்தை நம்மீது சுமத்தப் பார்க்கிறார்கள்

ஆனால் நம்முடைய ஜமாஅத்தின் செயல்பாடுகளும், நிலைபாடுகளும் பொதுமக்களுக்கு வெளிப்படையானவை. இதைப் பார்க்கும் யாரும் இவர்களுடைய இந்தப் பொய்ப் பிரச்சாரத்தை உண்மை என்று நம்ப மாட்டார்கள்.

மேலும் விபரமறிய

No comments:

Post a Comment